Møde kvindeudvalg – 18.05.2014

Udgivet af admin den

கடந்த 18.05.2014 இல் சங்கத்தின் மகளிர் பிரிவின் பொறுப்பாளர் மைதிலியின் தலைமையில் நடந்த ஒன்றுகூடலில் கலந்தாலோசிக்கப்பட்ட விடயங்கள் !

அகவணக்கத்துடன் கூட்டம் ஆரம்பமாகியது.

கலந்துகொண்ட உறுப்பினர்கள் வரவேற்கப்பட்டார்கள்.

பின்வரும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது

  • நீச்சல்
  • யோகாசனம்
  • ஒன்றுகூடல் (சில நிகழ்வுகளில் பிள்ளைகளும் கலந்துகொள்ளலாம்)
  • கைவேலை (பூமாலை கட்டுதல் ,பூ- செய்தல் , பூக்கள் அலங்காரம், தையல்)
  • பூமாலை கட்டுதல் ( நந்தினி )
  • தையல் – ( நந்தினி , திருமதி செல்லம்மா,  நந்தா )
  • cake icing – (நந்தினி , நந்தா, சுதா )

மகளிர் பிரிவினால் சங்கத்திற்கு கொடுக்கப்படும் ஆலோசனைகள்

சுற்றுலாப்பிரிவு – Himmelbjerg, Dollarup park, Åbenrå kovil என்பவற்றிற்கான சுற்றுலா ஏற்பாடுகள்

தீர்மானம்

மகளிர் பிரிவினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு உரித்தான செலவுகளை , செயற்பாட்டின் உறுப்பினர்களே பகிர்ந்து கொள்வர் . மேற்கொண்டு உதவி தேவைப்படின் சங்கத்திடம் விண்ணப்பிக்கப்படும்.

தனது அழைப்பினை ஏற்று வந்து , சிறந்த ஆலோசனைகளை நல்கிய அனைவருக்கும் சங்கத்தின் மகளீர் பிரிவின் பொறுப்பாளர் தனது நன்றியைக் கூறினார் . தொடர்ந்தும் ஆரோக்கியமான ஆலோசனைகள் எல்லா தரப்புகளிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிற்றுண்டி, தேநீர் தயாரித்து வந்து மேலும் இக் கூட்டத்தினை மெருகூட்டியவர்களுக்கு சிறப்பான நன்றி கூறப்பட்டுள்ளது.

மகளிர்பிரிவு
வீபோ தமிழர் சங்கம்
Kategorier: Kvindeudvalg