Generalforsamling 2020 -DTFV

Udgivet af DTFV den

தமிழர் சங்க அங்கத்தவர்களுக்கு!

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 09-02-2020 ஆம் திகதி நடைபெறவிருந்த தமிழர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் அநேகமான அங்கத்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இப் பொதுக்கூட்டத்தை சனிக்கிழமை 04-04-2020 ஆம் திகதி 14:00 மணிக்கு பிற்போடப்பட்டுள்ளது என்பதை உங்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம் .

ஏற்கனவே குறிப்பிட்ட மாதிரி நிர்வாகசபை உறுப்பினர்கள் அனைவரும் தமது பதவிகளில் இருந்து விலகிக்கொள்வதால், புதிய நிர்வாகம் ஒன்றை அமைக்கும் பொறுப்பு அங்கத்தவர்களாகிய உங்களிடம்தாம் தங்கியுள்ளது , ஆகவே தமிழர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் நடைபெறவிருக்கும் இப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உங்கள் ஆதரவை தமிழர் சங்கத்தின் வளர்ச்சிக்கு வழங்குமாறு உங்களை நாங்கள் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழர் சங்கம் உங்கள் சங்கம், உங்கள் அனைவரின் ஆதரவில்தான் எமது சங்கத்தின் வளர்ச்சி தங்கியுள்ளது என்பதையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்!

இடம் : Ungdomskole, திகதி: 04 April 2020 Kl . 14:00

இப் பொதுக்கூட்டத்திற்கு பிரேரணைகள் சமர்ப்பிக்கவிரும்புவோர் , பொதுக்கூட்ட தினத்திற்கு ஒரு கிழமைக்கு முன்னராக தலைவர் (formand-dtfv@outlook.dk) அல்லது செயலாளருக்கு ( sek.dtfv@outlook.dk ) எழுத்து மூலம் அறியத்தரவும்.

உங்கள் அங்கத்துவத்தை புதுப்பித்து தமிழர் சங்கத்துக்கு மீண்டும் ஆதரவு வழங்குமாறு நாம் உங்களை தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Kontingent: Voksen 100 kr om året / børn : 25 Kr
Sportskontingent 200 kr. om året.

இப்படிக்கு,
பாஸ்கரன் சீனித்தம்பி,
தமிழர் சங்கம் விபோ- DTFV

Kategorier: Begivenheder