Referat af generalforsamling. den 6. april 2014.

Udgivet af admin den

பொதுக்கூட்டமானது 15.15 மணிக்கு 3F மண்டபத்தில் ஆரம்பமானது.

48 அங்கத்தினர்கள் கலந்துகொண்டார்கள், அகவணக்கத்துடன் ஆரம்பமான கூட்டத்தில் தற்காலிக தலைவராக திரு மனோகரன் சுப்பிரமணியம் தெரிவுசெய்யப்பட்டு அவரின் நெறிப்படுத்தலுடன் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் திரு முருகையா அவர்கள் எதிர்காலத்தில் எப்படியான நடைமுறையில் சங்க நிகழ்வுகளை நடத்தலாம் என எதிர்வு கூறி , அதற்கான சில படிவங்களை கூட்டத்தில் சமர்ப்பித்தார்.

கடந்த நிகழ்வுகளில் சிறுவர் நிதிக்கான உண்டியல் வைக்கப்பட்டதில் 2189,50kr. சேர்ந்துள்ளது என்றும் அங்கத்தவர்களின் விருப்பத்தின்பிரகாரம் இந்நிதி கையாளப்படும் எனவும் தெரிவித்தார். கடந்த பொதுக்கூட்டத்தில் சிற்றுண்டிக்கு செலவான பணத்தினையும் (121kr) ,திருமதி தம்பிப்பிள்ளை அவர்களுடன் சேர்ந்து நடத்திய நவராத்திரி விழாவிற்கான மண்டபவாடகைப் பணத்தினையும்(31kr) நிர்வாகத்தினர் தாமே பொறுப்பெடுத்துக்கொண்டதாக (சொந்தப் பணத்திலிருந்து) சுட்டிக் காட்டப்பட்டது.

கணக்காளர் அறிக்கை திருமதி சுகன்யா சிவசுந்தரம் அவர்களினால் காட்சிப்படுத்தப்பட்டு விளக்கமும் அளிக்கப்பட்டது. இவ் அறிக்கையானது பொதுச்சபையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

தெரிவுக்குழுக்கள் தொடர்பான தகவல்கள் பரிமாறப்பட்டன, குழுப் பொறுப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

கலாச்சார குழுவின் பொறுப்பாளர் திரு கோகுலன் நிகழ்ச்சிகளுக்கு மக்களின் ஆதரவை வேண்டி நின்றார். நிகழ்ச்சி தயாரிப்புகளுக்கு உதவும் வகையில், தமது பிள்ளைகளை தாமாகவே முன்வந்து அனுப்பி வைப்பது சாலவும் சிறந்தது எனக் குறிப்பிட்டார்.

நவராத்திரியை தொடர்ந்து எவ்வாறு நடத்தலாம் என்பது பற்றி செயற்குழு கூடி முடிவெடுக்கலாம் என பொதுக்குழுவினால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கோகுலனின் சிறப்பான பணிக்கு கூட்டத்தினர் கரகோஷம் செய்து தமது ஆதரவினை தெரிவித்துக் கொண்டனர் .

விளயாட்டுப்பிரிவின் சார்பில் அதன் பொறுப்பாளர் திரு தயாபரன் கருத்துக் கூறினார் 42 உறுப்பினர்கள் பணம் செலுத்தி இதில் ஈடுபாடாக உள்ளனர் என்றும் மூன்று பிரிவாக இது நடைபெறுகின்றது என்றும் குறிப்பிட்டார்.

கைப்பந்து – திரு செல்வா – திரு சசி, பூப்பந்து – திரு டானியல் – திரு கணேஷ்

பிள்ளைகள் – திருமதி சுகன்யா, திரு பாஸ்கரன் , திரு மதி , திரு வதனன் , திரு கோகுலன் , திரு கணேஷ் இவர்களின் ஒத்துழைப்போடு எதிர்காலத்தில் இன்னமும் சிறந்த முறையில் நடத்துவதற்கான திட்டங்கள் உள்ளதாக குறிப்பிட்டார்.

திரு தயாபரனின் அயராத உழைப்புக்கு பொதுக்குழு தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டது, நேர அளவு இரண்டு மணித்தியாலங்களே போதுமானது என்றும் கருத்து கூறப்பட்டுள்ளது.

மாநகர சபையிலிருந்து உதவிப்பணம் பெறலாமா என்பது பற்றி செயற்குழு கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வயதுவந்தோர் பிரிவு சார்பாக அதன் பொறுப்பாளர் திரு சிவகணேசன் கருத்து கூறினார். ஏற்கனவே தமது குழு சார்பாக இரண்டு நடைப்பயணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்றும் எதிர்வரும் நடைபயணத்திற்கான திகதி தீர்மானிக்கப்பட்டு அங்கத்தினர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

தமிழர்களின் சிறந்த உணவு வகையான கூழ் தயாரிப்புக்கு எவ்வகையிலான ஆதரவு உள்ளது என்பது பற்றி கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. இது தொடர்பான ஆலோசனைகள் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்டு இதனை நடைமுறைப்படுத்துவதற்கான நெறிமுறைகள் ஆராயப்படும் என திரு சிவகணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மகளிர்பிரிவினை தொடர்ந்து இயங்கு நிலையில் வைப்பதற்காக திருமதி மைதிலி தெரிவானார். இவருக்கு உதவியாக திருமதி ஜீவா , திருமதி நந்தினி ஆகியோர் தெரிவானார்கள். ஒரு ஒன்றுகூடலை மையப்படுத்தி இயங்குநிலையைத் தோற்றுவிக்கலாம் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

கல்விப்பிரிவினை இயக்குவதற்காக பெற்றோர்களின் ஆலோசனை பெறப்படும் முறையில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தினை திருமதி சுதா வாமதேவன் நடத்தவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தகவல்பிரிவின் சார்பில் திரு கணேஷ் நடராசா கருத்துரைக்கையில் தாம் ஏற்கனவே ஒரு கருத்தாடலை திரு .Kaj O Andersen உடன் நடத்தியதாகவும் தொடர்ந்தும் மக்கள் நன்மை பெறும் வகையில் என்ன மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று தாம் ஆராய்வதாகவும் குறிப்பிட்டார்.

மக்களின் கருத்துக்கணிப்பிற்கான படிவங்கள் விநியோகிக்கப்பட்டதில் பின்வரும் முறையில் வாக்குகள் பதிவு செய்யப்படுள்ளது.

இனிவரும் காலங்களில் எவ்வகையான நிகழ்சிகளை செய்யலாம் என நீங்கள் விரும்புகிறீர்கள் ?

நத்தார் விழா – 32

பொங்கல் விழா – 31

நவராத்திரிவிழா – 29

வருடப்பிறப்பு – 22

ஆடிப்பிறப்பு – 12

தீபாவளி – 11

எமது சங்கத்திலுள்ள கீழ்காணும் மூன்று விடயங்கள் சாம்பந்தமாக உங்கள் கருத்து என்ன ?

பிரயாணம் – 24

கல்வி – 19

மகளிர் – 18

எவ்வகையான சாப்பாடு முறையை நீங்கள் விரும்புவீர்கள் ?

சங்கத்‌தால் செய்து விற்றல் – 21

கொண்டுவருதல் – 12

வாங்கிச் சாப்பிடுதல் – 8

Referat af Sekretær Vamedevan Vetrivelu

நன்றி, தமிழர் சங்கம்